புற்றுநோய் ஜாதக ஆய்வு

அட்சய லக்னப்பத்ததி முறையை உலகுக்கு தந்த மகா குருநாதர் முனைவர். சி.பொதுவுடை மூர்த்தி அவர்களை பணிந்து, எனது குலதெய்வம் மற்றும் எனது மூதாதையரை நெஞ்சத்தில் நிறுத்தி இந்த ஜாதகத்தை ஆய்வு செய்வோம்.

இவ் ஜாதகத்தில் அட்சய லக்னாதிபதி புதன் (மோட்ச வீட்டில் )12ம் வீட்டில் உள்ளது. அட்சய லக்னத்ததில் அட்டமாபதி செவ்வாய், சந்திரன் பகையாகி உள்ளதும் மற்றும் நட்சத்திரப்புள்ளி உத்திரம் 2 ம்பாதச் சூரியன் அட்சய லக்னத்திற்கு 11ம் வீடான கடகத்தில் இருந்து சனியின் கும்ப வீட்டை (ALP 6 ய் ) அட்டமமாக பார்ப்பதும் சிறப்பல்ல.
அட்சய லக்னத்திற்கு 6ல் கேது ,மாந்தி லக்னத்தை சமசப்தமமாக பார்ப்பது புற்றுநோய் கண்டமாக தெளிவாக தெரிகிறது.
மேலும் கும்ப வீட்டில் செல்லும் நட்சத்திரப்புள்ளி அவிட்டம் 3ம்பாதம் செவ்வாய் 6ம் வீட்டிற்கு 8ல் கன்னியில் உள்ளது இதை தெளிவாக உணர்த்துகிறது மற்றும் கும்ப வீட்டதிபதி சனி 6க்கு 12ல் மகரத்தில் உள்ளது மேலும் நோயின் வீரியத்தை உணர்த்துகிறது.
அட்சய லக்னத்திற்கு 4ம்வீட்டதிபதி சனியால் நீசபங்கம் அடைந்தாலும் நெஞ்சில் இருந்து வயிறு, முதுகுத்தண்டு போன்ற இடங்களுக்கு பரவியுள்ளதை சூரிய, சனி,குரு பார்வைகளும் தெளிவாக உணர்த்துகிறது. எனவே புற்றுநோயில் இருந்து இவர் மீண்டெழ வாய்ப்பு இல்லை. 29-03-2024 வரை மிகவும் கவனம் தேவை கோள்சாரம் சிறப்பாக இல்லை இவ் ஜாதகரிற்காக ஆண்டவனை வேண்டுங்கள்.

Tags: , , , , ,